Reading Time: < 1 minute
அமெரிக்கா மற்றும் கனடாவைத் தொடர்ந்து தாக்கும் கடுமையான உறைபனி காரணமாக குறைந்தபட்சம் 38 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நியூயோர்க் மாநிலத்தில் உள்ள பஃபலோ நகரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை அமெரிக்கா முழுவதும் 34 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்,
இதேவேளை கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியாவின் மேற்கு மாகாணத்தில் உள்ள மெரிட் நகருக்கு அருகே பேருந்து கவிழ்ந்ததில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
அடுத்த சில நாட்களில் புயல் குறையும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
பல நாட்களாக பேரழிவை ஏற்படுத்தியுள்ள பனிப்புயல் காரணமாக ஆயிரக்கணக்கான விமான சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.