அமெரிக்காவுடன் இணைந்தால் கனேடியர்களுக்கு மிகப்பெரிய வரிச்சலுகை கிடைக்கும் என்று கூறியுள்ளார் அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்ப்.
கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக பார்க்க ஆசையாக உள்ளது என்று கூறியுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவுடன் இணைவதால் கனேடியர்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதையும் பட்டியலிட்டுள்ளார்.
அமெரிக்காவுடன் இணைந்தால் கனேடியர்களுக்கு மிகப்பெரிய வரிச்சலுகை கிடைக்கும் என்றும் கனேடியர்கள் ராணுவத்தைக் குறித்து கவலையே படவேண்டாம் என்றும் கூறியுள்ள ட்ரம்ப், அத்துடன் கனேடியர்களுக்கு சிறந்த மருத்துவக் காப்பீடு கிடைக்கும் என்றும் கனேடியர்கள் அதை விரும்புவார்கள் என்று நான் நினைக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.
ட்ரம்ப் பேசுவதைக் காட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகமான எக்ஸில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், கனடாவின் நிதி அமைச்சராகவும், துணைப்பிரதமராகவும் பதவி வகித்த கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட், ட்ரம்புக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஜனாதிபதி ட்ரம்ப் அவர்களே, கனடா விற்பனைக்கு அல்ல என்று கூறியுள்ளார்.
மேலும், நாங்கள் வலிமையானவர்கள், சுதந்திரமானவர்கள், அத்துடன், உங்கள் மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள் கனேடியர்களால் லாபம் பார்க்க ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என்றும் கூறியுள்ளார் கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.