கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள் நுழையும் முயற்சியில் இந்தியக் குடும்பம் ஒன்று ஆற்றில் மூழ்கி பலியான வழக்கில் ஆதாரம் கிடைக்காததால் குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய முடியாமல் கனேடிய பொலிசார் திணறிவருகிறார்கள்.
ஒரு லட்சம் டொலர்கள் கொடுத்து கனடா வழியாக அமெரிக்காவுக்குள் நுழைய முயன்றது இந்தியக் குடும்பம் ஒன்று.
பிரவீன்பாய் சௌத்ரி (49), அவரது மனைவியான தக்ஷாபென் (45), தம்பதியரின் மகளான விதிபென் (23) மற்றும் மகன் மித்குமார் (20) ஆகியோர் அடங்கிய குடும்பம்தான் அது.
அவர்கள் பயணித்த மினிவேன் ஒன்றில் பொலிசார் ட்ராக் செய்யும் கருவி ஒன்றைப் பொருத்தி அவர்களை தொடர்ந்து கண்காணித்துவந்துள்ளார்கள்.
இருந்தும், ஆறு நாட்களுக்குப் பிறகு அந்தக் குடும்பம், செயின்ட் லாரன்ஸ் நதியில், ரொமேனியாவைச் சேர்ந்த ஒரு இளம் தம்பதியர் மற்றும் அவர்களுடைய இரண்டு குழந்தைகளுடன் சடலமாகத்தான் மீட்கப்பட்டது.
விடயம் என்னவென்றால், சௌத்ரி குடும்பம் பயணித்த மினிவேனை ஓட்டியவர் ஜோயல் (Joel Portillo) என்னும் நபர்.
ஜோயல் பிரபல ஆட்கடத்தல் கும்பல் ஒன்றைச் சேர்ந்தவர். அந்தக் கும்பலின் தலைவர் என சந்தேகிக்கப்படுபவர், இலங்கைத் தமிழரான தேசிங்கராசன் ராசையா என்பவர்.
சௌத்ரி குடும்பம் அமெரிக்காவுக்குள் நுழையும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்த நேரத்தில், ராசையாவுக்கும் ஆட்கடத்தல் சம்பவங்களுக்கும் இடையிலான தொடர்பை உறுதி செய்வதற்கான ஆதாரங்களைத் தேடிக்கொண்டிருந்திருக்கிறார்கள் கனேடிய பொலிசார்.
ஆட்கடத்தல் தொடர்பான சட்டம் ஒன்றை மீற சதி செய்தது தொடர்பான வழக்கு உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள ராசையாவும் ஜோயலும் இன்னமும் கனடாவில் காவலில்தான் அடைக்கப்பட்டுள்ளார்கள்.
ஆனாலும் இந்தியக் குடும்பம் உயிரிழந்த வழக்கில் இருவரும் குற்றவாளிகள் என முடிவாகவில்லை.
Comments are closed, but trackbacks and pingbacks are open.