Reading Time: < 1 minute

அமெரிக்காவின் 42 மாகாணங்களில் கொரோனா வைரஸ் தாக்கம் படிப்படியாகக் குறைவடைந்துள்ளதாக தற்போது அரசாங்க தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் சுமார் 3 இலட்சத்துக்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்துள்ள நிலையில் உலகில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடு என்ற பெயரை அமெரிக்கா பெற்றது.

ஜனாதிபதியாக பொறுப்பேற்றதும் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்துதல் குறித்த திட்டங்களை ஜோ பைடன் செயல்படுத்த ஆரம்பித்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வைரஸ் தாக்கத்தால் கடந்தாண்டு வேலை இழந்த நடுத்தர வர்க்க அமெரிக்கர்களுக்கு அரசு உதவித்தொகை அளிப்பதற்காக 1.9 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியை வழங்கும் சட்டத்திருத்தத்தினை தாக்கல் செய்ய அமெரிக்கா காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு ஜோ பைடன் கோரிக்கை வைத்தார்.

இந்த மாபெரும் சட்டத்திருத்தம் வேலை இழந்த அமெரிக்கர்கள் பலருக்கு வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க உதவும் என அவர் நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.