அமெரிக்காவில் கனேடியர் ஒருவருக்கு நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய தீவிரவாத அமைப்பான ஐ.எஸ்.தீவிரவாத அமைப்பிற்கு ஆட்களை திரட்டியதாக இந்த நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த 2013 மற்றும் 2014ம் ஆண்டுகளில் சிரியாவில் சுமார் ஆறுக்கும் மேற்பட்ட அமெரிக்கா மற்றும் கனேடியர்களை தீவிரவாத இயக்கத்தில் இணைத்துக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அப்துல்லாஹி அஹமட் அப்துல்லாஹி என்பவரே தீவிரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.
சிரியாவில் கடத்தல் மற்றும் படுகொலைகளை மேற்கொண்டதாக குறித்த நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த 2017ம் ஆண்டில் அப்துல்லாஹியை கனேடிய பொலிஸார் கைது செய்து அமெரிக்காவிற்கு நாடு கடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 2014ம் ஆண்டில் எட்மோன்டன் பகுதியில் நகையகம் ஒன்றில் கொள்ளையிட்டதனையும் குறித்த நபர் நீதிமன்றில் ஒப்புக்கொண்டுள்ளார்.