Reading Time: < 1 minute
அமெரிக்காவிலிருந்து கனடாவிற்குள் பிரவேசித்த ஆறு சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளன. கடுமையான குளிரான காலநிலையில் குறித்த ஆறு பேரும் நடந்தே எல்லையை கடந்துள்ளனர்.
கனடிய பொலிஸார் இது தொடர்பிலான தகவல்களை வெளியிட்டுள்ளார். மானிடோபா பொலிஸார் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
அண்மையில் கால் நடையாகவே நாட்டுக்குள் பிரவேசிக்க முயற்சித்த ஆறு சட்டவிரோத குடியேறிகளை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சில நாடுகளைச் சேர்ந்த குடியேறிகள் இவ்வாறு சட்டவிரோதமான முறையில் எல்லையை கடந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
கடும் குளிருடனான காலநிலைக்கு பொருந்தக் கூடிய ஆடைகளை இந்த நபர்கள் அணிந்திருக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
ஜோர்டான், ச்டான் மற்றும் மரிடவானா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.