கனடாவில் ட்ரோனை பயன்படுத்தி ஆயுதங்கள் கடத்தப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
தென்கிழக்கு ஒன்றாரியோவின் மரமொன்றில் சிக்கியிருந்த நிலையில் இந்த ட்ரோன் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
ட்ரோனில் கைத்துப்பாக்கிகள் வைக்கப்பட்டு கடத்தப்பட்டுள்ளதாகவும் அந்த ட்ரோன் மரமொன்றில் சிக்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்காவிற்கும் – கனடாவிற்கும் இடையிலான எல்லைப் பகுதியில் இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
ஒன்றாரியோவின் லாம்டன் பகுதியில் இந்த சந்தேகத்திற்கு இடமான வகையில் ஆயுதங்களுடன் இந்த ட்ரோன் மீட்கப்பட்டுள்ளது.
இந்த ட்ரோனில் சுமார் பதினொரு கைத்துப்பாக்கிகள் வைக்கப்பட்டிருந்தது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கனடாவில் தடை செய்யப்பட்ட கைத்துப்பாக்கி வகைகளே இந்த ட்ரோனிலிருந்து மீட்கப்பட்ட அனேகமானவை என பொலிஸ் பேச்சாளர் ஜேமி பய்டெலி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவிலிருந்து இந்த ஆயுதங்கள் கனடாவிற்குள் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் தகவல்கள் இருந்தால் அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.