ஒன்றாரியோ மக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
ஒன்றாரியோ மாகாண பொலிஸார் இந்த எச்சரிக்கையை மக்களுக்கு விடுத்துள்ளனர்.
மாகாணம் முழுவதிலும் மோசமான காலநிலை நிலவி வருவதாகவும் இதனால் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணம் செய்வதனை தவிர்த்துக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
காலநிலை எவ்வளவு துரித கதியில் மாற்றம் பெறுகின்றது என்பதனை புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்மஸ் பண்டிகைக் காலத்தில் பல்வேறு பயணங்கள் காணப்பட்டாலும், பாதுபாப்பினை கருத்திற் கொண்டு பயணங்களை வரையறுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக சில அதிவேக நெடுஞ்சாலைகள் கடந்த இரண்டு தினங்களாக மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.