குழந்தைகளின் உடைகள், வீட்டை வெப்பமாக்கும் மின்சாரக் கட்டணங்கள் மற்றும் தயாரிக்கப்பட்ட உணவுப்பொருட்களில் (pre-made grocery meals) போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கான ஜீ.எஸ்.ரீ வரி GST (Goods and Services Tax) நீக்கப்படும் என என்.டி.பி கட்சி வாக்குறுதி வழங்கியுள்ளது.
எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு இந்த வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தினால் சராசரி நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு ஆண்டுக்கு 448 டொலர்கள் வரை சேமிக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கட்சி கணிப்புகளின்படி, இதனால் கனடிய அரசு 4.5 பில்லியன் டொலர்கள் வரை வருவாய் இழக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
லிபரல் கட்சி கடந்த ஆண்டு கொண்டுவந்த மூலதன வருமான வரியை (capital gains tax) மீண்டும் செயல்படுத்துவதன் மூலம் செலவுகளை ஈடு செய்ய முடியும் என என்.டி.பி கட்சி தெரிவித்துள்ளது.
லிபரல் தலைவர் மார்க் கார்னி, தேர்தல் அறிவிப்புக்கு முன் இந்த வரி உயர்வை ரத்து செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுமக்களுக்கு நேரடியாக பயன் தரும் GST நீக்கல் திட்டம் மூலம் மக்கள் மத்தியில் ஆதரவை பெற என்.டி.பிகட்சி முயற்சித்து வருகின்றது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.