ஃபுளோரிடாவில் இடம்பெற்ற ஒரு தாக்குதல் சம்பவத்தின் போது கனேடிய படை வீரர் ஒருவர் கொல்லப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் ஆண் ஒருவரை ஃபுளோரிடா காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஃபுளோரிடாவின் பனாமா சிட்டி பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு வெளியே வைத்து, கடந்த சனிக்கிழமை தாக்கப்பட்ட அவர், தலையில் ஏற்பட்ட பலத்த காயங்கள் காரணமாக திங்கட்கிழமை உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
உயிரிழந்த 33 வயதான அந்த கனேடிய படை வீரர், வடஅமெரிக்க வான் பாதுகாப்பு கட்டளைப் பீடத்தில் பணியாற்றுவதற்காக இந்த ஆண்டு தொடக்கத்தில் அங்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், இவர் கடந்த 13 ஆண்டுகளாக கனேடிய படைப்பிரிவில் கடமையாற்றி வந்ததாகவும் கனேடிய தேசிய பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துவந்த ஃபுளோரிடா காவல்துறையினர், சம்பவம் தொடர்பில் 23 வயதான ஆண் ஒருவரை செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனர்.