உலகத் தமிழர் பேரவை மற்றும் கனடிய தமிழ் காங்கிரஸ் ஆகியன இணைந்து வெளியிட்டுள்ள ஹிமாலய பிரகடனத்தை நிராகரிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடிய தமிழ் இளைஞர் அமைப்பினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த இரண்டு அமைப்புக்களும் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதனை கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளது.
இனச்சுத்திகரிப்பில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கனடிய அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்ட மஹிந்த ராஜபக்சவுடன் குறித்த அமைப்புக்கள் தொடர்பு பேணியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தயாகத்தில் வாழும் தமிழர்கள் மற்றும் புலத்தில் வாழும் தமிழர்களது அங்கீகாரமின்றி இந்த அமைப்புக்கள் தன்னிச்சையாக செயற்படுவதாக குற்றம் சுமத்தியுள்ளது.
தமிழர் உரிமைகளுக்காக குரல் கொடுத்த பல்லாயிரக் கணக்கான மக்களின் உயிர்த் தியாகங்கள் உதாசீனம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த அமைப்புக்களின் பணிப்பாளர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டுமென கோரப்பட்டுள்ளது.
போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டுமென சர்வதேச சமூகத்திடம் மீண்டும் கோருவதாக கனடிய தமிழ் இளைஞர் அமைப்பு கோரியுள்ளது.
பின்வரும் அமைப்புக்கள் கூட்டாக இணைந்து ஹிமாலய பிரகடனத்தை நிராகரித்துள்ளன.
Brock University Tamil Students’ Association
Canadian Tamil Youth Alliance
Concordia University Tamil Mantram
OCAD University’s Tamil Students Association
Ontario Tech University Tamil Students’ Association
Queen’s University Tamil Students’ Association
Tamil Youth Organization Canada
The Mcmaster Tamil Students’ Association
TMU Tamil Students’ Association
Trent Tamil Students’ Association
University of Guelph / Guelph Humber Tamil Students’ Association
University of Ottawa’s Tamil Students’ Union
University of Toronto Mississauga Tamil Students’ Association
University of Toronto St.George Campus Tamil Students’ Association
University of Waterloo Tamil Networking Association
Western Tamil Students’ Association
Wilfrid Laurier University Tamil Students’ Association
York University Tamil Students’ Association