கனடாவின் கியூபெக் மாகாணத்தில், ஹாலோவீன் பண்டிகையின்போது கிடைத்த சாக்லேட்டை சாப்பிட்ட 4 வயது சிறுவன் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Drummondville நகரைச் சேர்ந்த Mylan என்ற சிறுவன், அக்டோபர் 31ஆம் தேதி கிடைத்த KitKat சாக்லேட்டை நவம்பர் 5ஆம் தேதி சாப்பிட்ட பின்னர் உடல்நலம் பாதிக்கப்பட்டதாகக் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
மருத்துவப் பரிசோதனையில் சிறுவனின் உடலில் கஞ்சாவின் போதைப்பொருள் கூறான THC இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
சிகிச்சைக்குப் பின்னர் சிறுவன் வீடு திரும்பியுள்ள நிலையில், சாக்லேட்டில் கஞ்சா கலந்திருந்ததா என்பது குறித்து கியூபெக் மாகாண பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஹாலோவீன் பண்டிகையில் குழந்தைகளுக்குக் கிடைக்கும் இனிப்புகளை கவனமாகப் பரிசோதிக்குமாறு பெற்றோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.





Comments are closed, but trackbacks and pingbacks are open.