Reading Time: < 1 minute

விமானப் பயணிகளுக்கான வெப்பநிலை சோதனைகளை கட்டாயமாக்கப் போவதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக நடைமுறையில் இருந்த கட்டுப்பாடுகள் பெரும்பாலும் தளர்த்தப்பட்டுள்ளதால், அடுத்த விமானப் பயணங்களை அனுமதிக்க அரசாங்கம் திட்டமிட்டு வருகின்றது.

இந்தநிலையில் விமானப் பயணங்களின் போது கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுப்பதற்காக, விமானப் பயணிகளுக்கான வெப்பநிலை சோதனைகளை கட்டாயமாக்கப் போவதாக பிரதமர் ஜஸ்டின் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘கனடா முழுவதிலும் உள்ள மாகாணங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருவதால், மற்ற நாடுகளில் காணப்படுவது போல், பொருளாதார மறுதொடக்கம் தொடங்கும் போது, நோய்த்தொற்றுகள் மீண்டும் உயரத் தொடங்கும்.

இரண்டாவது ஊடுருவலைத் தவிர்ப்பதற்கு, இன்னும் முக்கிய முன்னெச்சரிக்கைகள் மற்றும் மேம்பட்ட பொது சுகாதார நடவடிக்கைகள் கூட எடுக்கப்பட வேண்டும்.

ஒன்றாரியோ மற்றும் கியூபெக்கில் உள்ள நீண்டகால பராமரிப்பு இல்லங்களுக்கு இராணுவப் பணிகள் ஜூன் 26ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது’ என கூறினார்.