விமானத்தில் முகக்கவசம் அணிய மறுத்த இருவருக்கு தலா 1,000 டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கனடா போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
விமானத்தில் முகக்கவசம் அணிய மறுத்ததற்காக முதல் முறையாக அபராதம் விதிக்கபடுவது இதுவே முதல்முறையாகும்.
முதல் சம்பவம் ஜூன் மாதம் கல்கரியிலிருந்து ஒன்றாரியோவின் வாட்டர்லூவுக்கு ஒரு வெஸ்ட்ஜெட் விமானத்திலும், அடுத்தது ஜூலை மாதம் வான்கூவரில் இருந்து கல்கரிக்கு வெஸ்ட்ஜெட் பயணத்திலும் நிகழ்ந்தது.
இரண்டு சம்பவங்களிலும், விமானங்களின் போது தனிமனிதர்கள் முகக் கவசத்தை அணியுமாறு விமானக் குழுவினரால் பலமுறை அறிவுறுத்தப்பட்டனர். இரண்டு சந்தர்ப்பங்களிலும் தனிமனிதர்கள் மறுத்துவிட்டனர் என்று பயணிகளின் பெயரைக் குறிப்பிடாத விமான ஒழுங்குமுறை தெரிவித்துள்ளது.
தொற்றுநோய்க்கு மத்திய அரசின் செயற்பாட்டின் ஒரு பகுதியாக ஏப்ரல் 20ஆம் திகதி முதல் விமானங்கள் மற்றும் முனையங்களில் முகக் கவசங்கள் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.