Reading Time: < 1 minute
வின்னிபெக்கில் வீடற்றோருக்கான தனிமைப்படுத்தல் மையத்தில், இதுவரை கிட்டத்தட்ட 80 பேர் தனிமைப்படுத்த வந்துள்ளதாக ‘பிரதானத் வீதித் திட்டத்தின் நிர்வாக இயக்குநர் ரிக் லீஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், இவர்களில் பெரும்பாலானோர், நகரத்தின் அவசர மருத்துவ அறைகளிலிருந்து வந்தவர்கள் என அவர் தெரிவித்தார்.
கடந்த ஏப்ரல் மாத நடுப்பகுதியில் இருந்து, ‘பிரதானத் வீதித் திட்டம்’ (மெயின் ஸ்ட்ரீட் புராஜக்ட்) எனும் திட்டம் வீடற்றோருக்கான வசதிகளை வழங்கி வருகின்றது.
அரசு முன்னெடுத்துவரும் பல்வேறு நலத்திட்டங்களின் ஒரு பகுதியாக, வீடற்றோருக்கு இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று நேர்மறை முடிவு பெற்று, தனிமைப்படுத்தல் தேவைப்படுவோருக்கென்று ஒதுக்கப்பட்டுள்ளது.