Reading Time: < 1 minute

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில், வின்னிபெக்கில் புதிய கொவிட்-19 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த கட்டுப்பாடுகள் 19ஆம் திகதி திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வரும். மறு மதிப்பீடு செய்யப்படுவதற்கு முன் இரண்டு வாரங்கள் தொடரும்.

இதுகுறித்து தலைமை மாகாண பொது சுகாதார அதிகாரி டாக்டர் ப்ரெண்ட் ரூசின் கூறுகையில், ‘வீட்டு உறுப்பினர்களைத் தவிர, உங்கள் வீட்டில் இன்னும் ஐந்து பேரை மட்டுமே வைத்திருக்க முடியும் ஐந்து அல்லது அதற்கும் குறைவான மேசைகள் மட்டுமே உணவகங்களில் அனுமதிக்கப்படும்.

அடுத்து அனைத்து குளிர்பான அறைகள், பொழுதுபோக்கு வசதிகள், சூதாட்ட விடுதிகள் மற்றும் பிங்கோ அரங்குகள் மூடப்படும்.

கூடுதலாக, உணவகங்கள் மற்றும் சில்லறை கடைகள் 50 சதவீதம் திறனில் மட்டுமே செயற்பட அனுமதிக்கப்படும்.

தேவைப்படும் போது அபராதம் விதிக்கப்படலாம். எதிர்வவரும் வாரங்களில் அமுலாக்க முயற்சிகளை விரைவுபடுத்துவது குறித்து மாகாணம் ஆராயும்’ என கூறினார்.