கனடா மீது அமெரிக்கா கூடுதல் வரி விதித்துள்ள விடயம், கனேடிய அரசியல்வாதிகளைவிட, கனேடிய மக்களை அதிகம் கொந்தளிக்கச் செய்துள்ளது.
ஆகவே, அமெரிக்காவுக்கு தக்க பதிலடி கொடுக்கவேண்டும் என கருதும் மக்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துவருகிறது.
அமெரிக்க ஜனாதிபதி கனடா மீது கூடுதல் வரிகள் விதித்துள்ளதைத் தொடர்ந்து, கனேடிய மக்கள் ட்ரம்ப் மீது எவ்வளவு கோபமடைந்துள்ளார்கள் என்பது சமீபத்தில் Angus Reid நிறுவனம் நடத்திய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
ஆய்வுக்குட்படுத்தப்பட்ட கனேடிய பொதுமக்களில் 45 சதவிகிதம் பேர், தாங்கள் கடும் கோபத்திலிருப்பதாகவும், 37 சதவிகிதம் பேர் அமெரிக்கா தங்களுக்கு துரோகம் செய்துவிட்டதாக உணர்வதாகவும் தெரிவித்துள்ளார்கள்.
அமெரிக்காவின் அச்சுறுத்தல் தங்களுக்கு கவலையை உருவாக்கியுள்ளதாக 29 சதவிகிதம் கனேடியர்கள் தெரிவித்துள்ளார்கள்.
ஆகவே, கனடா மீது கூடுதல் வரிகள் விதித்துள்ள அமெரிக்காவுக்கு தக்க பதிலடி கொடுக்கவேண்டும் என்னும் விடயத்துக்கு, ஜனவரி மாதம் முதல், கனேடியர்களிடையே ஆதரவு அதிகரித்துவருகிறது.
சொல்லப்போனால், அமெரிக்காவுக்கு பதிலடி கொடுப்பதற்காக, கனேடிய மக்கள் மூன்று அம்சத் திட்டம் ஒன்றே வைத்திருக்கிறார்கள் எனலாம்.
அது என்னவென்றால், ஒன்று, அமெரிக்காவிலிருந்து கனடாவுக்குள் வரும் அனைத்துப் பொருட்களுக்கும் கனடா அரசு 25 சதவிகித வரி விதிக்கவேண்டும். இந்த விடயத்துக்கு 65 சதவிகித கனேடியர்கள் ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.
இரண்டு, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் முக்கிய பொருட்களை குறிவைத்து வரிகள் விதிக்கவேண்டும். இந்த விடயத்துக்கு 70 சதவிகித கனேடியர்கள் ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.
மூன்று, அத்தியாவசியமான சில பொருட்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய கனடா தடை விதிக்கவேண்டும். இந்த விடயத்துக்கும் 65 சதவிகித கனேடியர்கள் ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.