கொரோனா வைரஸ் (கொவிட்-19) அச்சுறுத்தல் காரணமாக, வன்கூவரில் சில வீதிகளில் கார்கள் ஓட்டுவது மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக நகர சபை தெரிவித்துள்ளது.
வன்கூவர் நகரம் 50 கிலோமீட்டர் தூரத்தை ‘மெதுவான வீதிகள்’ என்று அறிமுகப்படுத்துவதாகக் நகர சபை கூறுகிறது. மேலும் உள்முற்றம் என சில வீதிகளை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
நகரம் மெதுவான வீதிகள் என அடையாளம் காணப்படும் வீதிகள் உள்ளூர்வாசிகளை மட்டுமே கார்களை ஓட்ட அனுமதிக்கும். இது மிதிவண்டி ஓட்டுதலுக்கும் நடைபயிற்சிக்கும் அதிக இடத்தைத் தரும் என்று வன்கூவர் நகரம் கூறுகிறது.
நகரப் போக்குவரத்துத் திட்டமிடுபவர்கள் பாதசாரிகளுக்கான சில கட்டுப்பாட்டுப் பாதைகளை மறுபயன்பாடு செய்வதன் மூலமும், சில வணிக நிறுவனங்களுக்கு அதிக வருவாய் மற்றும் அதிகரித்த வீதியோரச் சரக்கெடுத்தல் (கர்ப்சைட்) தேவைகளுடன் சிறப்பு ஏற்றுதல் மற்றும் எடுத்துக்கொண்டு செல்லுதல் (பிக்-அப்) மண்டலங்களை உருவாக்குவதன் மூலமும் நடைபாதையில் அதிக இடத்தை உருவாக்கத் திட்டமிட்டப்பட்டுள்ளது.