Reading Time: < 1 minute
இலங்கை மத்திய வங்கி அதன் கொள்கை வட்டி வீதங்களைக் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளது.
மத்திய வங்கியின் நிலையான வைப்பு வசதி வீதம் மற்றும் நிலையான கடன் வசதி வீதம் ஆகியவற்றை முறையே 25 அடிப்படை புள்ளிகளால் குறைப்பதற்கு மத்திய வங்கியின் நாணய சபை தீர்மானித்துள்ளது.
நேற்று நடைபெற்ற இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, நிலையான வைப்பு வசதி வீதம் மற்றும் நிலையான கடன் வசதி வீதங்கள் முறையே 8.25 சதவீதம் மற்றும் 9.25 சதவீதமாக குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.