லெபனானுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிகள் வழங்கப்படும் என கனடா அறிவித்துள்ளது.
இதன்படி மனிதாபிமான அடிப்படையில் 10 மில்லியன் டாலர்களை கனடா லெபனானுக்கு வழங்க உள்ளது.
இஸ்ரேல் படையினருக்கும் ஹிஸ்புல்லா இயக்கத்திற்கும் இடையில் இடம்பெற்று வரும் மோதல்கள் காரணமாக லெபனான் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்கப்படும் என கனடா அறிவித்துள்ளது.
கனடிய சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் அஹமட் ஹுசெய்ன் இது தொடர்பில் அறிவித்துள்ளார்.
உணவு, குடிநீர் மற்றும் அவசர சுகாதார உதவிகள் உள்ளிட்ட தேவைகளுக்காக இந்த நிதி பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஊடாகவும் கனடா லெபனானுக்கு நன்கொடைகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இஸ்பல்லாஹ் இயக்கத்தை கனடா தீவிரவாத பட்டியலில் இணைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.