Reading Time: < 1 minute

கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் அரசாங்கத்திற்கு எதிராக கொண்டுவரப்பட்ட மூன்றாவது நம்பிக்கை இல்லா தீர்மானமும் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் நாடாளுமன்றில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.

கான்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பியே பொலியேவ் இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தார்.

சிறுபான்மை அரசாங்கமான லிபரல் அரசாங்கத்தை ஆட்சியில் இருந்து கவிழ்க்கும் நோக்கில் அவர் மூன்றாவது தடவையாக இவ்வாறு நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்திருந்தார்.

எவ்வாறெனினும், இந்த நம்பிக்கை இல்லா தீர்மானமும் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது என்டிபி கட்சியின் தலைவர் ஜக்மீட்சிங் அவையில் இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் என்.டி.பி மற்றும் பசுமைக் கட்சி என்பன லிபரல் அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தன.