Reading Time: < 1 minute
றொரன்ரோ பொதுச் சுகாதார அலுவலகம் பொதுமக்களுக்கு காட்டு விலங்குகள் தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ரக்கூன்கள் மற்றும் ஏனைய காட்டு விலங்குகளை தொடுவதனை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
நகரின் பல பகுதிகளில் நோய்வாய்ப்பட்ட மற்றும் காயமடைந்த ரக்கூன்களை அவதானிக்க முடிவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரக்கூன்களின் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டில் இதுவரையில் ரக்கூன் தாக்குதல்கள் தொடர்பான 88 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
ரக்கூன்கள் கடித்தல் மற்றும் நகங்களினால் கீறுதல் போன்ற காரணிகளினால் இவ்வாறு பலர் காயமடைந்துள்ளனர்.
ரக்கூன்களினால் தாக்கப்படுவோருக்கு நீர்வெறுப்பு நோய்கள் ஏற்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.