Reading Time: < 1 minute
றொரன்ரோவில் நாய் கடித்து பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். கிழக்கு யோர்க் பிராந்தியத்தைச் சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் நாயின் உரிமையாளரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் சி.சி.ரி.வி காணொளிகள் வெளியிடப்பட்டுள்ளன.
குறித்த பெண்ணின் தலை, கழுத்து, முதுகு மற்றும் கால் என பல்வேறு இடங்களிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளன.
கட்டுப்பாடின்றி நாயை வளர்த்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.