Reading Time: < 1 minute
றொரன்டோ பெரும்பாக பகுதியில் பத்து சென்றிமீற்றர் அளவில் பனிப்பொழிவு ஏற்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
கனேடிய சுற்றாடல் திணைக்களம் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
கனடாவை தாக்கும் பனிப்புயல் நிலைமையினால் றொரன்டோ மற்றும் அதனை அண்டிய பகுதிகளுக்கும் பாதிப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மணிக்கு 70 கிலோ மீற்ற என்ற வேகத்தில் காற்ற வீசும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
யோர்க், டர்ஹம், பீல், ஹால்டன் மற்றும் தென் ஒன்றாரியோ பிராந்தியங்களிலும் கடுமையான பனிப்பொழிவு மற்றும் காற்று வீசும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
வலுவான தாழமுக்க நிலை தென் ஒன்றாரியோவில் வெள்ளிக்கிழமை வரையில் நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீதியில் பயணிக்கும் போது மிகவும் அவதானத்துடன் பயணம் செய்ய வேண்டுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.