Reading Time: < 1 minute

மக்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி போடும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு அமைய, ரொறொன்ரோவின் முதல் பெரிய தடுப்பூசி மருந்தகம் திறந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

மெட்ரோ ரொறொன்ரோ கன்வென்ஷன் சென்டருக்குள் கிளினிக் அமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் மருந்தகத்தின், உடனடியாக நடவடிக்கைகளை இடைநிறுத்துமாறு மாகாண அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

இது குறைந்தது ஆறு வாரங்களுக்கு இயங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டநிலையில், தற்போது தடுப்பூசி பற்றாக்குறையால் தற்காலிகமாக மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அதே நாளில், ரொறொன்ரோவின் டாக்டர் எலைன் டி வில்லா, தடுப்பூசி மருந்தளவு ஏற்றுமதி 80 சதவீதம் வரை குறையும். அதே நேரத்தில் ஃபைசரின் நோர்வே தளம் அதன் உற்பத்தி திறனை மேம்படுத்தும் என கூறினார்.