Reading Time: < 1 minute

ரொறன்ரோ வைத்தியசாலைகளில் முகக் கவசம் அணிவது குறித்த நடைமுறையில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட் பெருந்தொற்று காரணமாக றொரன்டோவில் இவ்வாறு முகக் கவசம் அணியும் நடைமுறை அமுலில் இருந்தது.

நகரின் பிரதான வைத்தியசாலைகளில் முகக் கவசம் அணியும் நடைமுறைகளில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

நோயாளிகளின் அறைகள், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பகுதிகள் தவிர்ந்த பொது இடங்களில் முகக் கவசம் அணியத் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலை பணியாளர்களும், நோயாளிகளும் இவ்வாறு முகக் கவசம் அணியத் தேவையில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

கோவிட் தொற்று பரவுகை வெகுவாக குறைந்துள்ள காரணத்தினால் இவ்வாறு முகக் கவசம் அணிவதில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

றொரன்டோவில் கடந்த வாரத்தில் 36 பேர் கோவிட் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர் என தெரிவிக்கப்படுகின்றது.