Reading Time: < 1 minute
ரொறன்ரோ பொலிஸார் பனிப்படர்ந்த பகுதிகளில் நடமாடுவதனை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.
பனிபடர்ந்த பகுதியொன்றில் வாகனம் வீழ்ந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்திருந்தார். ஆஸ்பிரிட்ஜ் விரிகுடா பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றிருந்தது.
பனிக்கட்டிகள் உறுதியானவை போன்று தென்பட்டாலும் அவற்றில் ஆபத்து அதிகம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பனிப்படலம் எவ்வளவு செறிவானது என்பதை அறிந்து கொள்ளாது அதன் மேல் நடமாடுவது வாகனம் செலுத்துவது மிகவும் ஆபத்தானது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பனி விளையாட்டுக்களில் ஈடுபடும் போதும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு ரொறன்ரோ பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.
ஆபத்து ஏற்பட்டால உடனடியாக 911 என்ன எண்ணுக்கு அழைப்பு எடுக்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.