கனடாவின் ரொறன்ரோவின் பூங்காக்களில் மது அருந்துவது தொடர்பில் நகராட்சி பணியாளர்கள் யோசனை ஒன்றை முன்வைத்துள்ளனர்.
பரீட்சார்த்த அடிப்படையில் சில பூங்காக்களில் தற்காலிகமாக மது அருந்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
இந்த பரீட்சார்த்த முடிவுகளின் அடிப்படையில் பூங்காக்களில் நிரந்தரமாக மது அருந்துவதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டுமென நகராட்சி பணியாளர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.
பூங்காக்களில் மது அருந்துவதற்கு வழங்கப்பட்ட அனுமதி, பூங்காக்களுக்கு செல்வோருக்கு திருப்தி அளித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ரொறன்ரோவின் 27 பொதுப் பூங்காக்களில் 19 வயதுக்கும் மேற்பட்டவர்கள் மது அருந்துவதற்கு தற்காலிக அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டது.
பரீட்சார்த்த அடிப்படையில் இந்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2ம் திகதி முதல் ஒக்ரோபர் மாதம் 9ம் திகதி வரையில் இந்த தற்காலிக நடைமுறை அமுலில் இருந்தது.
இந்தக் காலப்பகுதியில் பூங்காவிற்கு சென்றவர்கள் மது அருந்துவதற்கான அனுமதி குறித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதன் அடிப்படையில் மது அருந்துவதற்கு நிரந்தரமாக அனுமதி வழங்கப்பட வேண்டுமென பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.