Reading Time: < 1 minute

கனடாவின் டொரன்டோ பகுதியில் வேலை வாய்ப்பு பெற்றுக் கொள்வதற்கு காத்திருப்போருக்கு ஓர் அதிர்ச்சி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

வேலை வாய்ப்பு எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புதிய வாழ்க்கையை, புதிய சந்தர்ப்பங்களை, தொழில்சார் வெற்றிகளை ஈட்டிக் கொள்ளும் நோக்கில் கனடாவிற்கு வருகை தரும் பலர் நெருக்கடிகளை எதிர் நோக்க நேரிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வெளியிடங்களில் இருந்து தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொள்வதற்காக காத்திருக்கும் அல்லது விண்ணப்பம் செய்யும் பலரது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதற்கு பிரதான ஏதுவாக கனடிய தகுதிகள் அல்லது கனடிய தொழில் அனுபவங்கள் தடையாக காணப்படுகின்றன என சுட்டிக்காட்டி உள்ளனர்.

பலர் கனடாவில் தொழில் வாய்ப்பு பெற்றுக் கொள்வதற்காக முயற்சி எடுத்து வருகின்றனர்.

எனினும் வேலையில்லா பிரச்சனை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

டரண்டோவில் ஆயிரக்கணக்கானவர்கள் வேலை வாய்ப்பின்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.

கனடிய புள்ளி விபரவியல் திணைக்களம் இது குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது.

கடந்த மே மாதம் டொரன்டோவில் வேலை வாய்ப்பு அற்றவர்களின் எண்ணிக்கை 317200 ஆக அதிகரித்துள்ளது.

ஏப்ரல் மாதத்துடன் ஒப்பீடு செய்யும் இந்த எண்ணிக்கை 1.79 வீத அதிகரிப்பு பதிவாகியுள்ளது.