Reading Time: < 1 minute

ரொறன்ரோவில் எதிர்வரும் 2025ம் ஆண்டில் வீடுகளின் விலைகள் உயர்வடையும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் இவ்வாறு வீடுகளின் விலைகள் உயர்வடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

றோயல் லீபேஜ் என்ற நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஆண்டு நான்காம் காலாண்டு பகுதியில் வீடுகளின் விலைகள் ஐந்து வீதத்தினால் அதிகரிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

சராசரியாக வீடுகளின் விலைகள் 1225770 டொலர்களாக காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.