Reading Time: < 1 minute

ரொறன்ரோவில் உள்ள வெதுப்பகத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில், 6பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஓக்வுட் அவென்யூவுக்கு அருகிலுள்ள எக்ளிண்டன் அவென்யூ வெஸ்டில் உள்ள ஸ்பென்ஸ் வெதுப்பகத்தில் நேற்று (புதன்கிழமை) அதிகாலை இந்த துப்பாக்கி சூடு இடம்பெற்றுள்ளது.

பாதிப்படைந்தவர்களில் ஒரு பெண் மற்றும் 30 முதல் 69 வயதுக்குட்பட்ட ஐந்து ஆண்கள் அடங்குவதாகவும் அவர்கள் கடுமையான ஆனால் உயிருக்கு ஆபத்தான இல்லாத காயங்களுடன் ரொறன்ரோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

புதன்கிழமை பிற்பகல் நிலவரப்படி, பாதிக்கப்பட்ட 6 பேரில் ஐந்து பேர் மருத்துவமனையில் இருந்து வெளியேறிவிட்டதாகவும், ஒருவர் பின்னர் வெளியேறவுள்ளதாகவும் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இதுகுறித்து வெதுப்பக உரிமையாளர் லோக்ஸ்லி பிரிசெட் கூறுகையில், ‘நிறைய பேர் உள்ளே ஓடத் தொடங்கினர், அவர்கள் உள்ளே ஓடிய பிறகு யாரோ கத்தினார்கள். நான் சுடப்பட்டேன்’ என கூறினார்.

இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் சம்பவத்தை பார்த்தவர்கள் என கூறப்படுகின்றது.

துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் கருப்பு நிற எஸ்.யு.வி வாகனத்தில் தப்பிச் சென்று விட்டதாக கூறப்படுகின்றது. அவர்களை கைது செய்யும் முயற்சியில் பொலிஸ் களமிறங்கியுள்ளனர்.