ரொறன்ரோவில் இளம் தலைமுறையினர் அழுத்தங்களை எதிர் நோக்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னைய தலைமுறையினரை விடவும் தற்போதைய இளைய தலைமுறையினர் பெரும் மன உளைச்சலை எதிர்நோக்குவதாகவும் நிதி ரீதியாக பிரச்சனைகளை எதிர் நோக்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலம் இந்த விடயம் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பில் அண்மையில் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. Toronto Foundation charityஎன்ற அறக்கட்டளை அமைப்பு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
குறிப்பாக வயது, இருபதுகளை கொண்ட இளம் தலைமுறையினர் தனிமையை உணர்வதாகவும் உணவு பாதுகாப்பின்மையினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் உள ரீதியான பிரச்சனைகளை எதிர் நோக்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஒப்பீட்டளவில் ஏனைய வயதுகளை உடையவர்கள் எதிர்நோக்கும் அழுத்தங்களை விட இந்த இளம் தலைமுறையினர் கூடுதல் அழுத்தங்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக இந்த இளம் தலைமுறை அதிக அளவு நிதி நெருக்கடியை எதிர் நோக்க நேரிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரொறன்ரோவை சேர்ந்த 18 முதல் 29 வயது வரையிலானவர்களில் 45 வீதமானவர்களது உளச்சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வீட்டு வாடகை, அடகுக் கடன் போன்ற பல்வேறு பிரச்சனைகளினால் வாரத்தில் மூன்று நாட்கள் வரையில் தனிமையை அல்லது மன உளைச்சலை இவர்கள் எதிர்நோக்குகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.
கோவிட் பெருந்தொற்று காரணமாக 18 முதல் 30 வயது வரையிலான ரொறன்ரோ பிரஜைகள் கூடுதல் பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.