Reading Time: < 1 minute

ரொறன்ரோவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நபர் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.

ரொறன்ரோவின் – ஈஸ்ட் யோர்க் பகுதியின் விக்டோரியா பார்க் அவன்யூ மற்றும் கிரசன்ட் டவுன் வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்த பொலிஸார் குறித்த இடத்திற்கு விரைந்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார் மற்றைய நபர் படுகாயமடைந்துள்ளார்.

துப்பாக்கிச் சூடு மேற்கொண்ட நபர் சம்பவ இடத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

என்ன காரணத்தினால் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டது என்பது குறித்து இன்னும் கண்டறியப்படவில்லை.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு குறித்து ஏதேனும் தகவல்கள் இருந்தால் அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.