கனடாவின் ரொறன்ரோ நகரின் மேயர் பதவி வெற்றிடத்திற்காக கடுமையான போட்டி நிலவும் நிலையில், மேயர் பதவிக்கான கூடுதல் வாய்ப்பு பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
மெயின்ஸ்ட்ரீட் ரிசர்ச் என்னும் நிறுவனத்தினால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போதைய நிலைமைகளின் அடிப்படையில் ரொறன்ரோ மேயர் பதவிக்கான பிரகசாமான வாய்ப்பு ஒலிவியோ ச்சோவிற்கு காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கருத்துக் கணிப்பில் பங்கேற்ற 22 வீதமானவர்கள் ஒலிவியாவிற்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.
எவ்வாறெனினும், மேலும் 30 வீதமானவர்கள் இன்னமும் யாருக்கு வாக்களிப்பது என்பதை தீர்மானிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
ரொறன்ரோவில் மேயராக கடமையாற்றி வந்த ஜோன் டோரி பதவி விலகியதை தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது.
மேயர் பதவிக்கான தேர்தலில் சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.