Reading Time: < 1 minute

ரஷ்யா, மியன்மார் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் மீது கனடா மேலும் தடைகளை அறிவித்துள்ளது.

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டமைக்காக இவ்வாறு தடைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ரஷ்யாவின் 33 தற்போதைய முன்னாள் அரச அதிகாரிகள் மற்றும் 6 நிறுவனங்கள் மீது கனடா தடை விதித்துள்ளது.

உக்ரைன் படையெடுப்புக்கு எதிராக போராட்டங்களை நடாத்தும் ரஷ்ய பிரஜைகள் மீது திட்டமிட்ட அடிப்படையில் அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்படுவதாகவும் மனித உரிமைகள் மீறப்படுவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்தது முதல் இதுவரையில் சுமார் 1500 தனிப்பட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீத கனடா தடை விதித்துள்ளது.

ஈரானைச் சேர்ந்த 22 நபர்கள் மீது கனடா தடைகளைள விதித்துள்ளது, நீதிமன்றம், சிறைத்துறை, சட்ட அமுலாக்கம் மற்றும் அரசியல்வாதிகள் மீது இவ்வாறு தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

மேலும் மியன்மாரைச் சேர்ந்த 12 நபர்கள் மற்றும் மூன்று நிறுவனங்கள் மீதும் மனித உரிமை குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் கனடா தடை விதித்துள்ளது.

இந்த தடைகள் குறித்து கனடாவின் வெளிவிவகார அமைச்சர் மெலெனி ஜோலி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.