Reading Time: < 1 minute
யாழ்ப்பாணம் – நாவற்குழி மாதா கோவிலடியில் நேற்று (17) இடம்பெற்ற விபத்தில் கனடா வாழ் புலம்பெயர் தமிழர்கள் சிக்கியுள்ளனர்.
வேக கட்டுப்பாட்டை இழந்த கார், வீதியோரத்தில் உள்ள மாதா கோவிலின் மதிலுடன் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சாரதியின் நித்திரை கலக்கம்
எனினும் விபத்தின்போது வாகனத்தில் பயணம் செய்த மூவருக்கும் எந்தவிதமான காயங்களும் ஏற்படவில்லை.
கனடாவில் இருந்து வந்த பெண் ஒருவர், அவரது கணவர் மற்றும் 5 வயது சிறுமி ஆகியோர் பயணித்த காரே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளது்.
சாரதியின் நித்திரை கலக்கமே விபத்துக்கான காரணம் என தெரியவந்துள்ளதுடன் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.