Reading Time: < 1 minute

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று வீதம் குறையாததால், மொன்றியலிலுள்ள பாடசாலைகளை மீண்டும் திறப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

முதலில் மே 11ஆம் திகதி முதல் மீண்டும் திறக்க, மொன்றியல் பகுதி வணிக நிறுவனங்கள் திட்டமிடப்பட்டிருந்தன.

ஆனால், பாடசாலைகள், தினப்பராமரிப்பு மற்றும் வணிகங்கள் மீண்டும் திறக்கப்படுவது மே 25ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக மாகாண முதல்வர் பிராங்கோயிஸ் லெகால்ட் தெரிவித்துள்ளார்.

ஆனால் ஏற்கெனவே ஒரு வாரத்திற்கு அதாவது மே 18ஆம் திகதிக்கு மீண்டும் திறக்கப்படுவது என்பதும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

மொன்றியல் பகுதியில் உள்ள பாடசாலைகள் மே 19 ஆம் திகதி மீண்டும் திறக்க திட்டமிடப்பட்டிருந்தன. மாகாணத்தில் மற்ற பகுதிகளில் மே 11ஆம் திகதி மீண்டும் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.