மெக்சிகோவின் இறையாண்மையை மதிப்பதாக கனடா தெரிவித்துள்ளது.
மெக்சிகோவில் தற்பொழுது இடம் பெற்று வரும் அரசியல் சாசன மறுசீரமைப்பு சர்ச்சைகள் தொடர்பில் கனடா தனது நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளது.
கனடிய வெளிவகார அமைச்சு இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது.
மெக்ஸிகோவின் உள் விவகாரங்களில் தலையீடு செய்யும் நோக்கம் கிடையாது என கனடா அறிவித்துள்ளது.
கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய தூதரகங்கள் உடனான உறவுகளை இடைநிறுத்தி வைத்துள்ளதாக மெக்சிகோவின் ஜனாதிபதி அன்ட்ரேஸ் மெனுவெல் லோபஸ் ஒர்பாடர் அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார்.
இரு நாடுகளும் மெக்சிகோவில் முன்னெடுக்கப்பட்டு வரும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான பின்னணியில் மெக்சிகோவின் உள் விவகாரங்களில் தலையீடு செய்யப் போவதில்லை என கனடா அறிவித்துள்ளது.
கனடா, தமது நாட்டு உள் விவகாரங்களில் தலையீடு செய்வதாக மெக்சிகோவின் ஜனாதிபதி ஒப்ராடர் தெரிவித்துள்ளார்.