Reading Time: < 1 minute

பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்ள்ஸின் முடிசூட்டு நிகழ்வுகள் தொடர்பில் கனடியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முடிசூட்டு நிகழ்வினை முன்னிட்டு லண்டனில் தங்கியிருக்கும் கனடியர்களுக்கு இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத அச்சுறுத்தல் காணப்படுவதாக கனடிய வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

வாகனங்களில் மோதச் செய்தல் , கத்தி குத்து மற்றும் குண்டுத் தாக்குதல்கள் குறித்த அச்சுறுத்தல்களை மறுப்பதற்கில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க கட்டடங்கள், பாடசாலைகள், வழிபாட்டு தலங்கள், விமான நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமென கனடிய அசராங்கம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

லண்டனை அண்டிய பகுதிகளைச் சேர்ந்த கனடியர்களுக்கு இந்த பயண அறவுறுத்தல்கள் வெளியிடப்படடுள்ளன.