அதிகமான மக்கள் தற்போது மிதிவண்டிகளை பயன்படுத்தும் நிலையில், ரெட் டீர் பொலிஸார் அவர்களுக்கு எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளனர்.
அதிகமான மக்கள் உடற்பயிற்சி செய்ய அல்லது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பாதுகாப்பாக நேரத்தைச் செலவிட முயல்வதால் வீதிகளில் அதிகமான மிதிவண்டி ஓட்டுநர்கள் உள்ளனர்.
இந்தநிலையில் மிதிவண்டிகள் திருட்டு அதிகரித்துள்ளதாக ரெட் டீர் நகர்ப்புறப் பிரிவின் படைத்துறை அலுவலர் (கார்ப்பொரல்) டுவைன் ஹனுசிச் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘தூண்டில் கார்களைப் போலவே, நாங்கள் தூண்டில் மிதிவண்டிகளைப் புலப்படும் பகுதிகளில் நிறுத்தி, மிதிவண்டிகள் திருடப்படுகிறதா என்று கண்காணிப்பு நடத்துகிறோம். அப்படி நடத்தால், நாங்கள் உள்ளே சென்று திருடனைக் கைது செய்கிறோம்.
தூண்டில் மிதிவண்டிகுகள் திருட்டைத் தடுக்கவும், திருடர்களைப் பிடிக்கவும் நாம் பயன்படுத்தக்கூடிய ஒரு கருவியாகும்’ என கூறினார்.
மிதிவண்டி உரிமையாளர்கள் தங்கள் மிதிவண்டிகளை ஒரு கொட்டகையில் அல்லது வண்டிக்கொட்டிலில் பூட்டி வைப்பது, கனரகப் பூட்டைப் பயன்படுத்துவது, திருடப்படக்கூடிய எந்தவொரு உபரணங்களையும் அகற்றுவது அல்லது ஒவ்வொரு நாளும் ஒரே இடத்தில் நிறுத்தப்படுவதைத் தவிர்ப்பது போன்றவை மூலம் திருட்டுகளைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்கலாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.