Reading Time: < 1 minute

பிரித்தானியாவின் முன்னாள் மகாராணி இரண்டாம் எலிசபத்தை கௌரவிக்கும் வகையில் கனடாவில் புதிய நாணயம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இரண்டு டொலர் பெறுமதியான நாணயக் குற்றியில் மகாராணியின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.

2022ம் ஆண்டு என பொறிகப்பட்டுள்ள இந்த நாணயம் இந்த மாத இறுதியில் புழக்கத்தில் விடப்பட உள்ளது.

பிரித்தானிய மகாராணியின் மறைவினை நினைவு கூரும் வகையில் நாணயத்தினை சுற்றி கறுப்புநிற வளையமொன்றுடன் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நாணயத்தின் ஒரு பக்கம் மறைந்த மகாராணியின் தலையும் மறுபக்கத்தில் பனிக்கரடியும் பொறிக்கப்பட்டுள்ளது.

70 ஆண்டு ஆட்சியின் பின்னர் மகாராணி கடந்த செப்டம்பர் மாதம் மறைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.