எகிப்தில் மரண தண்டனையை எதிர்நோக்கி வரும் ஏதிலிக் கோரிக்கையாளரை கனடா நாடு கடத்த உள்ளது.
டொக்டர் இஸாட் கவுடா என்ற மகப்பேற்று மருத்துவ நிபுணரே இவ்வாறு நாடு கடத்தப்பட உள்ளார்.
அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் டொக்டர் கவுடாவிற்கு எகிப்து அரசாங்கம் மரண தண்டனை விதித்துள்ளது.
இவ்வாறான ஓர் ஆபத்து நிலவும் நிலையில் தம்மை நாடு கடத்துவது எந்த வகையில் நியாயமானது என டொக்டர் கவுடா கேள்வி எழுப்பியுள்ளார்.
தமக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை குறித்த ஆவணங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை கனடிய அதிகாரிகளுக்கு வழங்கிய நிலையில் இவ்வாறு நாடு கடத்தப்படுவதாக டொக்டர் கவுடா தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் கனடா போன்றதொரு நாடு தம்மை நாடு கடத்துகின்றமை அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.
டொக்டர் கவுடா நாளைய தினம் எகிப்திற்கு நாடு கடத்தப்பட உள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.