Reading Time: < 1 minute

மனிடோபாவில் அடுத்த நான்கு ஆண்டுகளில் 40,000 தனியார் துறை வேலைகள் வழங்குவதே தனது இலக்கு என முற்போக்கு கன்சர்வேடிவ் தலைவர் பிரையன் பாலிஸ்டர் தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 10ஆம் திகதி மீண்டும் நடைபெறும் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டால், கட்சியின் ஐந்து உத்தரவாதங்களை நிறைவேற்ற தயாராகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நெடுஞ்சாலைகள், சுரங்கம், சுற்றுலா ஆகியவற்றிற்கு அதிக செலவு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மனிடோபா ஒர்க்ஸ் வேலைகள் வளர்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக, திட்டமிடல் குறித்த மாகாண மதிப்பாய்வின் பரிந்துரைகளின் பேரில் தான் செயல்படுவதாகவும் பாலிஸ்டர் கூறினார்.