Reading Time: < 1 minute
சிலர் மதங்களை அவமரியாதை செய்யும் வகையில் கருத்து வெளியிடுவதனால் மதங்களுக்கு இடையில் எதிர்பாராத பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு காணப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இவ்வாறான பல்வேறு முரண்பாடுகளுக்கு அடிப்படையான அறிக்கைகள் தொடர்பில் பொலிஸார் விசேட கவனம் செலுத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டு;ள்ளார்.
இது தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் குறித்து. உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு உரிய சந்தேக நபர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்;.
அத்துடன் நாட்டில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையில் மதங்களை அவமதிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடாமல்; இருப்பது ஒவ்வொருவரின் பொறுப்பு எனவும் குறிப்பிட்டுள்ளார்.