போதை மருந்து மரணங்கள் ஒன்றாரியோ மாகாணத்தில் அதிக அளவு பதிவாகும் சாத்தியம்!
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் அதிக அளவு மரணங்கள் பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
போதை மருந்து பயன்படுத்தும் பாதுகாப்பு நிலையங்கள் மூடப்படுவதன் மூலம் இவ்வாறு மரணங்கள் பதிவாகும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
போதை மருந்து பயன்படுத்துவோருக்கு உதவும் வகையில் கண்காணிக்கப்பட்ட பாதுகாப்பு நிலையங்களில் போதை மருந்து பயன்படுத்த வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு மையங்கள் மூடப்படுவதன் மூலம் மித மிஞ்சிய அளவில் போதை மருந்து உட்கொள்ளும் சாத்தியத்தினால் மரணங்கள் வெகுவாக அதிகரிக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஒன்றாரியோ மாகாணத்தில் தற்போது காணப்படும் போதை மருந்து பயன்படுத்தப்படுவதற்கான கண்காணிப்பு நிலையங்களை மூடுவதற்கு மாகாண அரசாங்கம் யோசனை முன் வைத்துள்ளது.
இந்த யோசனை கனடாவில் போதை மருந்து பயன்படுத்துவோரின் மரண எண்ணிக்கையை அதிகரிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பள்ளிக்கூடங்கள், சிறுவர் பராமரிப்பு நிலையங்கள், விளையாட்டு மைதானங்கள் போன்றவற்றிற்கு அருகாமையில் அமைந்துள்ள நிலையங்களை மூட வேண்டும் என அரசாங்கம் யோசனை முன்வைத்துள்ளது.
எனினும் இந்த யோசனையின் காரணமாக மரணங்கள் அதிக அளவில் பதிவாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.