Reading Time: < 1 minute

சுமார் 40 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பெறுமதியான கொக்கேய்ன் போதை பொருளை கடத்தியதாக இரண்டு ஒன்றாரியோ பிரஜைகள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் இலியானிஸ் மாநிலத்தில் இந்த போதை பொருள் மீட்கப்பட்டிருந்தது.

டிராக்டர் ட்ரெய்லர் வண்டி ஒன்றில் இந்த போதை பொருள் கடத்தப்பட்டிருந்தது என தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்க போலீசார் குறித்த இரண்டு நபர்களையும் கைது செய்துள்ளனர்.

குறித்த வாகனத்தில் 540 கிலோ கிராம் எடையுடைய கொக்கேய்ன் போதை பொருள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 27 வயதான ஒன்ஸ்கிரேட் சிங் மற்றும் 36 வயதான மண் பிரீட்சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த இருவருக்கு எதிராகவும் போதை பொருள் கடத்தல் மற்றும் விநியோகம் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் சுமத்தி வழக்கு தொடரப்பட்டுள்ளது.