போதியளவு சம்பளம் வழங்கப்படவில்லை என கனடிய ஒன்றாரியோ மாகாணத்தின் பெலிவெல் பகுதி மருத்துவர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
குடும்ப மருத்துவர்களே இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளனர்.
ஏற்கனவே கனடிய சுகாதாரத்துறையில் பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ள நிலையில், குடும்ப மருத்துவர்களின் குற்றச்சாட்டு மேலும் நிலைமைகளை மோசமடையச் செய்யும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நோயாளி ஒருவருக்கு 39 டொலர்கள் வழங்கப்படுவதாகவும் உண்மையில் ஒரு நோயாளிக்கு 100 டொலர்கள் வழங்கப்பட வேண்டுமெனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
போதியளவு ஊதியம் வழங்கப்படாத காரணத்தினால் மருத்துவர்கள் குடும்பல நல மருத்துவ சேவையிலிருந்து விலகினால் அது பாரதூரமான பிரச்சினையாக மாறும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தாங்கள் வழங்கும் தனியார் மருத்துவ சேவைகளின் ஊடாகவே தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடிவதாகவும், அரசாங்கத்தினால் வழங்கப்படும் கொடுப்பனவு போதுமானதல்ல எனவும் மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.