Reading Time: < 1 minute

பெரும்பாலான கனேடிய அரசியல்வாதிகளுக்கான ஒப்புதல் மதிப்பீடுகள் அதிகரித்து வருவதாக அண்மைய கருத்து கணிப்பொன்று தெரிவிக்கின்றது.

இதில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் ஜக்மீத் சிங் ஆகியோர் முன்னிலையில் உள்ளனர்.

ரிசர்ச் கோவின் தரவுகளின் படி, கூட்டாட்சித் தேர்தல் நடத்தப்பட்டால் 37 சதவீதம் வாக்காளர்கள் லிபரல் கட்சி வேட்பாளருக்கு வாக்களிப்பார்கள்.

இதன்படி, தற்போதைய லிபரல் கட்சி தலைவர், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, செப்டம்பர் முதல் அவரது ஒப்புதல் வீதம் 5 சதவீதம் அதிகரித்துள்ளது.

இரண்டாவது மிக உயர்ந்த ஒப்புதல் மதிப்பீடு என்டிபி தலைவர் ஜக்மீத் சிங்கிற்கு 46 சதவீதமாக ஆக உள்ளது. இது 2 சதவீதம் உயர்ந்துள்ளது.

அடுத்து, பழமைவாதக்கட்சித் தலைவர் எரின் ஓ டூல் 35சதவீதமாக உள்ளது. இது 2 சதவீதமாக உயர்ந்துள்ளது.

பசுமைக் கட்சியின் அன்னமி பால் தவிர அனைத்து தலைவர்களும் அதிக ஒப்புதல் மதிப்பீட்டைக் கண்டிருப்பதாகத் தெரிகிறது. அதன் மதிப்பீடு அப்படியே உள்ளது.

அல்பர்ட்டா, மனிடோபா மற்றும் சஸ்காட்செவன் ஆகியவை பழமைவாதக் கட்சியை விரும்புகின்றன. பிரிட்டிஷ் கொலம்பியாவில், என்டிபி மற்றும் பழமைவாதக்கட்சிகள் முட்டிமோதுகின்றன.