Reading Time: < 1 minute

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று அதிகரிப்பு காரணமாக, போது பெரிய சில்லறை நிறுவனங்களையும் தொழிற்சாலைகளையும் மூடுமாறு பிராம்ப்டனின் மேயர் பேட்ரிக் பிரவுன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘ஒன்ராறியோவில் பழைய அணுகுமுறை செயற்படவில்லை. அமேசான், பெரிய சில்லறை நிறுவனங்கள் மற்றும் நெரிசலான தொழிற்சாலைகள் அவற்றின் கதவுகளை மூட வேண்டிய சில இடங்கள்.

எவ்வாறாயினும், இந்த இடங்கள் திறந்த நிலையில் இருக்க வேண்டும் என்றால், எங்கள் விநியோக சங்கிலியால் அதைக் கையாள முடியாது என்பதால், அத்தியாவசிய தொழிலாளர்கள் தடுப்பூசிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

பெரிய சில்லறை நிறுவனங்களை மூட விரும்பினாலும், பாடசாலைகள் திறந்த நிலையில் இருக்க வேண்டும்’ என கூறினார்.