Reading Time: < 1 minute

பெயிரூட்டில் ஏற்பட்ட பயங்கர வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு கனேடிய அரசாங்கம் 5 மில்லியன் டொலர் வரை நிவாரணம் அளிக்கிறது.

வெடிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசர மருத்துவச் சேவைகள், தங்குமிடம் மற்றும் உணவு வழங்க இந்தப் பணம் பயன்படுத்தப்படும் என்று கனேடிய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கனேடிய அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கனடா தொடர்ந்து நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.

மேலும் பெயிரூட்டில் உள்ள மனிதாபிமான அமைப்புகளுடன் தொடர்பில் உள்ளது. கனடா இந்த கொடூரமான சோகத்திற்கு பதிலளிக்க கூடுதல் உதவிகளை வழங்க தயாராக உள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.